
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பை குறி வைத்து ஈரான் பாலுசிஸ்தான் மாகாணத்தில் ராக்கெட் மற்றும் ட்ரோன் மூலமாக தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததோடு மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. அதன்படி ஈரான் நாட்டின் சப்பார் பகுதியை குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் டெய்லி பத்திரிக்கை தெரிவித்துள்ளது.