பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பை குறி வைத்து ஈரான் பாலுசிஸ்தான் மாகாணத்தில் ராக்கெட் மற்றும் ட்ரோன் மூலமாக தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததோடு மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த தாக்குதலின் எதிரொலியாக ஈரான் நாட்டிற்கான தங்கள் நாட்டு தூதரை பாகிஸ்தான் அரசு திரும்ப அழைத்துள்ளது. அதேபோன்று பாகிஸ்தானுக்கான ஈரான் தூதருக்கு நாட்டிற்குள் அனுமதி வழங்க மறுத்துவிட்டது. அதோடு ஈரானின் தாக்குதல் சட்டவிரோதமானது என்று குற்றம் சாட்டியுள்ளது.