தெஹ்ரான்: ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் 6 நாள் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள், அந்நாட்டின் தலைநகரான தெஹ்ரானில் முறைப்படி தொடங்கியுள்ளன. ஈரானின் மிக சக்திவாய்ந்த தலைவராக விளங்கிய அவரது மறைவையொட்டி, இன்று முதல் ஜூலை 9 ஆம் தேதி வரை லட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் நேரில் வந்து தங்களின் இறுதி அஞ்சலியைச் செலுத்தும் வகையில் ஈரான் அரசு மிக பிரம்மாண்டமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
தலைநகர் தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு, அலி கமேனியின் உடலானது இறுதிச் சடங்குகளுக்காக மஷ்ஹத் நகருக்குக் கொண்டு செல்லப்பட உள்ளது. அங்குள்ள உலகப் புகழ்பெற்ற இமாம் ரெசா தர்காவில் அவரது உடல் இறுதி அடக்கம் செய்யப்பட உள்ளதாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சர்வதேச அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த இறுதிச்சடங்கு நிகழ்வு, தற்போது உலக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் முதன்மைச் செய்தியாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
