கனடாவின்  உள்ள  பூங்காவில், கனடா தினத்தைக் கொண்டாடத் திரண்டிருந்த மக்களிடையே குப்பைகள் சிதறிக் கிடந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெரோனிகா லேஸ் என்ற பெண், அங்கிருந்த தன்னார்வலர்களிடம் குப்பைகள் ஏன் அகற்றப்படாமல் உள்ளன என்று கேள்வி எழுப்பினார். கனடாவின் நிலத்தை நாங்கள் இப்படித்தான் நடத்துகிறோமா? என்று அவர் கேட்டதோடு, தாமே முன்வந்து தனது குழந்தைகளுடன் சேர்ந்து குப்பைகளை அகற்றத் தொடங்கினார். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்த வீடியோவிற்கு மக்கள் மத்தியில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. சில பயனர்கள் பூங்கா தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும் என்ற அந்தப் பெண்ணின் கருத்தை ஆதரித்தனர்.

“>

அதே வேளையில், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தன்னார்வலர்கள் நிகழ்ச்சி முடிந்த பிறகு பூங்காவைச் சுத்தம் செய்துவிடுவதாகத் தெரிவித்திருந்தனர் என்றும், அந்தப் பெண் தேவையற்ற அதிகாரத்துடன் நடந்து கொண்டதாகவும் ஒரு தரப்பினர் வாதிட்டனர். இருப்பினும், இறுதியில் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பூங்காவைச் சுத்தம் செய்த காட்சிகள் பகிரப்பட்டன.