மேற்காசியப் போர் குறித்து முன்கூட்டியே கணித்து ‘சீனாவின் நாஸ்ட்ரடாமஸ்’ என்று அழைக்கப்படும் வரலாற்று ஆய்வாளர் ஜியாங் ஷுயெகின், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு மிகப்பெரிய பொறியில் சிக்கப்போவதாக எச்சரித்துள்ளார். நவம்பர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவார் மற்றும் ஈரானுடன் அமெரிக்கா போரிடும் என்று அவர் ஏற்கனவே கணித்திருந்தார்.

மேலும் தற்போது, ஈரான் மீதான போரில் அமெரிக்காவிற்குப் பின்னடைவு ஏற்படும் என்றும், ஈரான் நாகரிகத்தை அழிப்பதாக ட்ரம்ப் கூறிய போதிலும், இறுதியில் அமெரிக்கப் படைகள் ஈரான் மண்ணில் தரைப்படைத் தாக்குதலை நடத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதனால் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஏவுகணை பலத்தை விட, ஈரானின் நெகிழ்வுத்தன்மை கொண்ட போர் உத்திகள் வலிமையானவை என்று ஜியாங் கருதுகிறார். அமெரிக்கா தனது வான்வழித் தாக்குதலை மட்டுமே நம்பி இந்தப் போரைத் தொடங்குவது ஒரு ‘தலைகீழ் பிரமிடு’ போன்ற பலவீனமான உத்தி என்றும், இது இறுதியில் தோல்வியில் முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.