பெலாரஸ் நாட்டின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையும், உலக வரிசையில் இரண்டாம் இடத்தில் இருப்பவருமான அரினா சபலென்கா, தனது காதலரான ஜார்ஜியோஸ் ஃபிரங்குலிஸை கரம் பிடிக்க உள்ளார். பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரம் முன்பாக, ஜார்ஜியோஸ் மிகவும் சர்ப்ரைஸாக சபலென்காவிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.
மேலும் எதிர்பாராத இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், ஜார்ஜியோஸ் மண்டியிட்டு மோதிரம் அணிவிக்க, சபலென்கா மகிழ்ச்சியுடன் தனது சம்மதத்தைத் தெரிவித்தார். இந்த அழகான காதல் முன்மொழிவு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது காட்டுத்தீயாக பரவி வருகிறது.
View this post on Instagram
“>
இதனால் சபலென்காவின் வருங்கால கணவரான ஜார்ஜியோஸ் ஃபிரங்குலிஸ், ‘ஓக் பெர்ரி’ என்ற பிரபல நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் ஆவார். கடந்த சில மாதங்களாகவே இருவரும் டேட்டிங் செய்து வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ஏற்கனவே தனது முன்னாள் காதலரின் திடீர் மறைவால் சோகத்தில் இருந்த சபலென்கா, தற்போது மீண்டும் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கியிருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இந்த ஜோடிக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
