மத்திய கிழக்கில் 40 நாட்கள் நீடித்த கடும் போருக்குப் பிறகு தற்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலுக்கு எதிர்பாராத விதமாக இத்தாலி ஒரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுடனான தனது பாதுகாப்பு ஒப்பந்தத்தை இத்தாலி திடீரென ரத்து செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளும் நவீன ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பரிமாறி வந்தன. தற்போதைய போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி அறிவித்துள்ளார். இது சர்வதேச அளவில் இஸ்ரேலின் பாதுகாப்பு வியூகத்தில் ஒரு பெரிய தொய்வாகக் கருதப்படுகிறது.
இத்தாலியின் இந்த அதிரடி முடிவால் இஸ்ரேல் தனித்து விடப்பட்டுள்ள நிலையில், அந்நாடு இந்தியாவின் உதவியை நாடியுள்ளது. இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் லெபனான் எல்லைகளில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழல்கள் குறித்து விவாதித்தார்.
போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தாலும் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் இன்னும் தீர்வு எட்டப்படாததால், இந்தியாவின் ஆதரவு தங்களுக்கு முக்கியம் என்பதை இஸ்ரேல் இந்த அழைப்பின் மூலம் உணர்த்தியுள்ளது.
