நடிகை ஷெரின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையடுத்து ஷெரின் மீண்டும்  பிரபலமாகி இருக்கிறார். அதன்பின் நீண்ட இடைவெளிக்கு பின் ஷெரின் திரைப்பட வாய்ப்புகளை பெற்று வருகிறார். அடிக்கடி போட்டோ ஷூட் எடுத்து இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் நடிகை ஷெரின் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், இன்ஸ்டாகிராம் நேரலையின்போது ரசிகர் ஒருவர் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள் என கேட்டார். இதற்கு பதிலளித்த அவர், ‘ஜாதகப்படி எனக்கு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடக்கும் என கூறியிருக்கிறார்கள். ஆனால், இன்ஸ்டா பில்டர் எனக்கு அடுத்த மாதம் திருமணம் என கூறுகிறது. எனவே விரைவில் திருமணம் செய்ய உள்ளேன்’ என்றார்.