தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகும் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்த நிலையில் குடும்பத் தலைவிகள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

இந்நிலையில் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தகுதி வாய்ந்த மகளிருக்கு உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் அரசு ஊழியரின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் அரசு ஓய்வூதியம் பெரும் குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு உரிமை தொகை கிடைக்காது என கூறப்படுகிறது. மேலும் விலை உயர்ந்த பொருட்களை வைத்திருப்பவருக்கும், வருமான வரி செலுத்துவோருக்கும் இந்த உரிமை தொகை கிடைக்காது எனவும் கூறப்படுகிறது.