கர்நாடக மாநிலத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவில் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதோடு 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முக கவசம் கட்டாயம் இல்லை என்றாலும் பொது இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.