மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ராவ்ஜி பஜார் பகுதியில் நடந்த ஒரு கொடூரமான ரோடு ரேஜ் (Road rage) சம்பவம் தான் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கே போதை தலைக்கேறிய நிலையில் இருந்த நபர் ஒருவர், அந்த வழியாக காரில் சென்று கொண்டிருந்த ஒரு குடும்பத்தை வழிமறித்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். காரில் பெண் மற்றும் குழந்தைகள் இருக்கிறார்கள் என்ற கொஞ்சமும் இரக்கமில்லாமல், அந்த போதை ஆசாமி காரை மறித்து உள்ளே இருந்தவர்களைக் கொடூரமாகத் தாக்கத் தொடங்கியுள்ளார்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் காரில் இருந்த ஒட்டுமொத்த குடும்பமும் மரண பயத்தில் அலறியுள்ளது. இந்த கொடூரத் தாக்குதலால் மிரண்டு போன அந்த குடும்பத்தினர், தங்களின் பாதுகாப்பிற்காக அந்த ஆசாமி செய்த அராஜகங்கள் அனைத்தையும் தங்களது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். பின்னர் இந்த ஆதாரத்தை போலீசாரிடம் ஒப்படைத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளனர்.
A shocking road rage incident has emerged from Indore's Raoji Bazar
where a heavily intoxicated man blocked and brutally assaulted a family inside their car
Despite a woman and children being present inside the vehicle the attacker showed no restraint
The terrified family… pic.twitter.com/Jq4jNBUlJl
— Ramesh Tiwari (@rameshofficial0) July 13, 2026
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவிடம், “பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் வீதிகளில் பாதுகாப்பு இல்லை என்றால், சட்டத்தின் மீதான பயம் எங்கே போனது? இந்த அராஜகத்திற்கு எப்போது தான் முடிவு கிடைக்கும்?” என்று பொதுமக்கள் பலரும் தங்களது கடும் கண்டனங்களையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
