நடிகர் அஜித் குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. இனிமேல் இளையராஜாவின் பாடல்களை தங்கள் திரைப்படங்களில் பயன்படுத்த மாட்டோம் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.

முன்னதாக, இந்தப் படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன், இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘இளமை இதோ, இதோ’, ‘ஒத்த ரூபா தாரேன்’, ‘என் ஜோடி மஞ்சக்குருவி’ ஆகிய மூன்று பாடல்களையும் நீக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.