கடந்த 1992-ல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த சின்ன சின்ன ஆசை எனும் பாடலை மின்மினி பாடினார். 1991-1994 வரை பிரபல பாடகியாக இருந்து வந்த இவர் இளையராஜா இசையிலும் அதிகம் பாடி உள்ளார். இந்நிலையில் மின்மினி இளையராஜா பற்றி புகார் ஒன்றை கூறி இருக்கிறார். அதாவது, ஏ.ஆர்.ரகுமான் உடன் பணிபுரிந்த பிறகு இளையராஜா அடுத்து வாய்ப்பு தரவில்லையாம்.

வேறு இடத்தில் பாட துவங்கியதால் அதையே இனிமேல் தொடர்ந்து செய் என காட்டமாக இளையராஜா அவரிடம் கூறி விட்டாராம். ஒரு பாடல் ரெக்கார்டிங் நடுவில் இளையராஜா இப்படி நடந்துக்கொண்டுள்ளார். அப்போது உடன் இருந்த பாடகர் மனோ மின்மினியை சமாதானப்படுத்தினார். இதை ஒரு டிவி ஷோவில் மின்மினி கலக்கத்துடன் கூறி உள்ளார்.