சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப் டைரக்டில் “ஜெயிலர்” படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் மோகன்லால், சுனில், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா உட்பட பலர் நடித்துள்ளனர். அண்மையில் தான் ஜெயிலர் படத்தின் சூட்டிங் முடிவடைந்தது. இதனை படக்குழுவினருடன் நடிகர் ரஜினி கேக் வெட்டி கொண்டாடினார்.

இப்போது விஜய் நடித்து வரும் லியோ படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் லியோ படத்தின் கேரளா தியேட்டர் ரைட்ஸ் ரூ.15 கோடிக்கும் மேல் வியாபாரம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரம் ரஜினியின் ஜெயிலர் படத்தின் கேரளா தியேட்டர் ரைட்ஸ் வெறும் 4 கோடிக்கு தான் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது