இந்தியாவில் மத்திய அரசு சார்பாக பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்காக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது கர்நாடக மாநில அரசு சுயதொழில் கடன் திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில் இந்த திட்டம் மூலமாக எஸ்சி எஸ்டி பிரிவு இளைஞர்கள் சுய தொழில் மேற்கொள்வதற்கு நேரடியாக கடன் வாங்க முடியும். இந்த திட்டம் வேலையில்லாத இளைஞர்கள் கைவண்டிகள் வாங்கி அதில் காய்கறிகள் அல்லது பழங்களை விற்பனை செய்து சுய தொழில் செய்து வருமானம் ஈட்ட உதவியாக இருக்கும்.

இதற்கான கடன் மற்றும் மானிய உதவி கர்நாடக அரசு சார்பாக வழங்கப்படுகிறது. வேலையில்லாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சுய தொழில் மேற்கொள்வதற்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு வந்தால் அதில் 50 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும். மீதமுள்ள ஐம்பதாயிரம் ரூபாய் கடனாக வழங்கப்படும். இந்த தொகையை நான்கு சதவீத வட்டி விகிதத்தில் 30 தவணைகளில் திருப்பி செலுத்தலாம். கடன் வழங்கப்பட்டு அவர்கள் தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்டால் அதற்கான அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் இந்த திட்டத்தில் சேர விண்ணப்பம், புகைப்படம், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்கள் அவசியம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.