கடந்த 19ஆம் தேதி விசாகப்பட்டினம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் தீயில் எரிந்து நாசமாகின. இதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மீனவர் நானி தான் இதற்கு காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நானி youtube சேனல் நடத்தி வந்துள்ளார். இவர் மீன் பிடிப்பது மீனவர்களின் வாழ்க்கை போன்றவற்றை காணொளியாக வெளியிட்டு youtubeல் பிரபலமானவர். தீ விபத்து ஏற்பட்ட அன்று இவர் தனது மாமாவுடன் சேர்ந்து படகில் மது அருந்தியுள்ளார்.

அப்போது புகைப்பிடித்துக் கொண்டிருந்த நானி அதனை அணைக்காமல் படகு ஒன்றில் கிடந்த நைலான் வலையில் வீசியுள்ளார். அந்த வலையில் பிடித்த நெருப்பானது மற்ற படகுகளுக்கும் பரவியது கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து நானி கைது செய்யப்பட்டுள்ளார்.