மும்பை குரார் கிராமத்தை சேர்ந்த யஸ்வந்த் பாபுரோ ஷின்டே என்பவர் 2001 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் அவரது பெற்றோர் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததோடு அந்த பெண்ணிற்கு வேறு ஒரு திருமணமும் செய்து வைத்து விட்டனர். இதனால் கோபமடைந்த ஷின்டே தான் காதலித்த பெண்ணின் பெற்றோரை எரித்து கொலை செய்தார்.

பின்னர் தலைமறைவாகிவிட்டார். அவர் தனது குடும்பத்தினரின் தொடர்பையும் முற்றிலுமாக தவிர்த்து விட்டதால் தலைமறைவான அவரை கைது செய்வதில் காவல்துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டது. 2001 இல் மும்பையில் இருந்து தலைமறைவாகி பெங்களூர் சென்றுள்ளார். ஷின்டே பின்னர் 2005 ஆம் ஆண்டு புனேவுக்கு வந்து அங்கேயே பெயிண்டர் ஆக வாழ துவங்கியுள்ளார்.

இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்து வந்த காவல்துறையினருக்கு ஷின்டே புனவில் இருப்பது தெரிய வர விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். 22 வருடங்களுக்கு முன்பு செய்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக 44 வயதில் ஷின்டே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.