இந்தியாவில் அரசு நிர்ணயம் செய்த தொகையை விட கூடுதல் வருமானம் மற்றும் சம்பளம் பெறுபவர்கள் அனைவரும் மாதந்தோறும் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும். பெரும்பாலானோர் போலியாக தகவல்களை சமர்ப்பித்து வருமான வரி செலுத்துவதில் இருந்து தப்பித்து விடுகின்றனர். இந்த நிலையில் வருமான வரி ஏய்ப்பு செய்து கணக்கில் காட்டாமல் உள்ள சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் குறித்து அரசுக்கு தகவல் தெரிவித்தால் ஒரு கோடி ரூபாய் வரை பரிசுத்தொகை வழங்கப்படும் என்று புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அது மட்டுமல்லாமல் வருமான வரி செலுத்துவோரின் வங்கி விவரங்கள் அனைத்தையும் சரிபார்க்க புதிய சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருமான வரித்துறை அறிவிக்கும் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வருமானவரி கணக்குகளை தாக்கல் செய்யவில்லை என்றால் சம்பந்தப்பட்ட கணக்குத் தாரர்களின் வரிசலுகை ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.