தெலுங்கானாவில் வருகின்ற நவம்பர் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஏராளமான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றன. பொதுவாக அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் மத அடிப்படையில் இஸ்லாமியர்களுக்கு நான்கு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இதன் காரணமாக வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்த ஒரு பலனும் கிடைக்காததால் தற்போது தெலுங்கானா மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் நான்கு சதவீதம் இட ஒதுக்கீடு தகர்த்தப்பட்டு பிற்படுத்த மற்றும் பட்டியலிட மக்களுக்கு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.