தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இதன் மூலமாக ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன் பெரும் விதமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று ஆகஸ்ட் 8 சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

THRIVENI CAR COMPANY என்ற தனியார் நிறுவனம் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெற உள்ள நிலையில் மாதம் பத்தாயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் வழங்குகிறது. இதற்கு பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.