டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 19ஆம் தேதியான  இன்று  தேனி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மையம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி  மேரி மாதா மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இருந்த முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பல முன்னணியில் தனியார் நிறுவன ங்கள் கலந்து கொள்கின்றன.

இதில் 10 முதல் அனைத்து வகையான கல்வி தகுதியும் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். அத்துடன் தையல் பயிற்சி உள்ளிட்ட கைத்தொழில் தெரிந்தவர்களும் பங்கேற்கலாம். இதற்கு தங்களின் சுயவிவர குறிப்பு, கல்வி சான்றிதழ் உள்ளிட்டவற்றை கட்டாயம் எடுத்துவருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.