கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொள்ளுபாளையத்தில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுடன் பாண்டியின் தாய் வசந்தா வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று வயிற்று வலியால் துடித்த ராஜாவை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் ஸ்கேன் எடுக்குமாறு தெரிவித்தனர். ஆனால் ஸ்கேன் எடுக்காமல் மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு ராதா வீட்டிற்கு வந்துவிட்டார்.

நேற்று முன்தினம் திடீரென மயங்கி விழுந்த ராதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராதா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் போலீசார் கூறியதாவது கடந்த 14-ஆம் தேதி மாசாணியம்மன் கோவிலுக்கு ஊசி, பாசி விற்பனை செய்வதற்காக ராதாவும் வசந்தாவும் சென்றனர்.

பின்னர் இரவு 7 மணிக்கு வீட்டுக்கு வரும்போது இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது வசந்தா ராதாவின் வயிற்றுப் பகுதியில் காலால் மிதித்தார். இதனால் அவர் இறந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் பிரத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் அவர் இறந்ததற்கான முழு காரணம் தெரியவரும். தற்போது சந்தேக மரணம் என வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறினர்.