வரவிருக்கும் தைப்பொங்கலை முன்னிட்டு, ஏழைகளுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்கும் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி முதல் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த முறை 15 ரகங்களில் சேலைகளும், 5 ரகங்களில் வேட்டிகளும் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசுத்தொகையாக ₹5,000 வழங்கப்படும் என தகவல் வெளியான நிலையில், இதுதொடர்பான மகிழ்ச்சியான அறிவிப்பை விரைவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிடுவார் என அமைச்சர் சக்கரபாணி கூறியிருந்தார். வேட்டி, சேலை அறிவிப்புடன், பொங்கல் பரிசுத்தொகை குறித்த முதலமைச்சரின் அறிவிப்பை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.