மகாராஷ்டிர மாநிலம் புனே, விமான நகர் பகுதியில் சிகரெட் பணம் கேட்ட கடைக்காரரை இளைஞர் ஒருவர் கொடூரமான ஆயுதத்தால் தாக்கி, கடையை சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதன்கிழமை இரவு 8:30 மணியளவில் கடைக்கு வந்த 5 முதல் 6 பேர் கொண்ட குழுவினரிடம், சிகரெட் பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த ஒரு இளைஞர், கடையின் மீதும் கடைக்காரர் மீதும்அரிவாள் ஆயுதத்தைப் பயன்படுத்தி வன்முறையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
#WATCH | Youth Vandalises Shop With Koyta After Owner Demanded Money For Cigarette In Viman Nagar
🔗 https://t.co/riroX2WZzr#Pune #PuneNews #Crime #FPJPune pic.twitter.com/aLBBiA4zUC
— Free Press Journal (@fpjindia) November 28, 2025
“>
இச்சம்பவம் குறித்து விரைந்து செயல்பட்ட விமான நகர் காவல் நிலைய மூத்த ஆய்வாளர் கோவிந்த் ஜாதவ், குற்றச்சாட்டிற்குள்ளான நான்கு நபர்களையும் (அதில் மூன்று பேர் சிறார்கள்) அடையாளம் கண்டு கைது செய்துள்ளதாகவும், அவர்களுக்கும் கடைக்காரருக்கும் இலவச சிகரெட் கேட்டு ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்த மோதல் நடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், புனேயில் இத்தகைய குற்றச் செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவது அதிகரித்துள்ளதாக உள்ளூர் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
