நாகை மற்றும் இலங்கை பயணிகள் கப்பல் சேவை தொடக்க நாளில் மட்டும் பயண கட்டணத்தில் 75 சதவீதம் சிறப்பு கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. செறிய பாணி என்ற நாகை மற்றும் இலங்கை இடையேயான கடல் போக்குவரத்து சேவை அக்டோபர் 14ஆம் தேதி அதாவது இன்று முதல் தொடங்குகின்றது. அதனால் இன்று மட்டும் 2803 என்ற பயண கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கப்பலில் பயணம் செய்ய 7,670 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் முதல் நாளில் மட்டும் சலுகை அறிவிப்பு வெளியாகி உள்ளது.