அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையைத் தனது நாட்டில் முன்னின்று நடத்திய பாகிஸ்தானின் இரட்டை முகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்த பாகிஸ்தான், உலகில் அமைதியை நிலைநாட்ட முயற்சிப்பதாகக் கூறிக்கொண்டது.
ஆனால், இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், பாகிஸ்தான் ஒருபுறம் சமாதானம் பேசிவிட்டு, மறுபுறம் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது சர்வதேச அளவில் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
குறிப்பாக, ஈரானின் எதிரியாகக் கருதப்படும் சவுதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் ரகசியமாக எஃப்-16 (F-16) போர் விமானங்களை வழங்கி வருவது அம்பலமாகியுள்ளது. ஏற்கனவே சவுதி அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடந்தால் அது மற்றொரு நாட்டின் மீதான தாக்குதலாகக் கருதப்படும்.
இதன் அடிப்படையில், ஈரானால் பாதிக்கப்பட்ட சவுதிக்கு பாகிஸ்தான் ராணுவ உதவிகளைச் செய்து வருகிறது. ஒருபுறம் அமைதித் தூதுவர் போல நடித்துக்கொண்டு, மறுபுறம் போருக்குத் தேவையான ஆயுதங்களை வழங்குவது பாகிஸ்தானின் உண்மை நோக்கத்தை உலக நாடுகளிடையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
