தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சிவாஜி மற்றும் ரஜினிகாந்தின் படங்களில் நடித்து ஒரு கட்டத்தில் அவர்களுக்கே ஜோடியாக அளவிற்கு வளர்ந்தவர் தான் நடிகை மீனா. இவர் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது 2009 ஆம் வருடம் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார். இப்படி திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வந்த மீனாவிற்கு இடையில் எதிர்பாராத ஒரு பெரிய இழப்பு நேர்ந்தது. தன்னுடைய கணவரை விசித்திரமான நுரையீரல் நோய் ஒன்றால் இழந்தார் மீனா.

இந்த நிலையில் மீனாவின் சொத்து மதிப்பு குறித்த விபரம் வெளியாகி வைரலாகி வருகிறது. 46 வயதான நடிகை மீனாவின் பேங்க் பேலன்ஸ் மற்றும் கோடிக்கணக்கில் இருக்கிறதாம். அவருடைய முழு சொத்து மதிப்பானது 35 கோடியில் இருந்து 40 கோடி வரை இருப்பதாக கூறப்படுகிறது. கணவர் இஞ்ஜினியராக  வேலை பார்த்தபோது அவருடைய மாத சம்பளம் மட்டும் மூன்றிலிருந்து நான்கு லட்சம் வரை இருந்ததாம். இவர் உயிரிழப்பதற்கு முன்பாக தன்னுடைய சொத்துக்களை எல்லாம் மீனாவின் பெயரில் எழுதி வைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.