டெல்லியில் காணாமல் போன சிறுமி பஞ்ச்குளாவில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் சிறுமி காணாமல் போனதைத் தொடர்ந்து, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். உத்திர பிரதேசத்தில் சிறுமியின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில், இது எங்களது மகள்தான் என்று பெற்றோர்கள் அடையாளமும் காட்டியுள்ளனர்.
இருப்பினும் போலீசார் விசாரிக்கவே அது அவர்களது மகள் இல்லை என பின்னர் தெரிய வந்ததோடு, மீண்டும் சிறுமியை தேடும் பணியில் அவர்கள் ஈடுபட, இறுதியாக பஞ்ச்குளாவில் சிறுமி உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டார். எப்படி காணாமல் போனீர்கள் என்ற கோணத்தில் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் தனது தாயுடன் ஏற்பட்ட தகராறால் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து சிறுமி தனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
