சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ காண்போரை உறைய வைத்துள்ளது. பங்களாதேஷில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த வீடியோவில், ஒரு ரயில் பெட்டிகளின் உள்ளே இடமில்லாமல், அதன் மேற்கூரையில் நூற்றுக்கணக்கான மக்கள் அமர்ந்து பயணம் செய்கின்றனர்.
ரயில் நிலையத்திற்கு வரும்போது, மேற்கூரையில் இருந்த பயணிகள் கீழே இறங்குவதற்குப் படிக்கட்டுகளைப் பயன்படுத்த முடியாமல், அங்கிருக்கும் இரும்புத் தூண்களையும், மின்சாரக் கம்பங்களையும் பிடித்துக் கொண்டு மிகவும் ஆபத்தான முறையில் கீழே இறங்குகின்றனர். இதில் பெண்களும் அடங்குவர்.
View this post on Instagram
ஒரு சிறிய கால் தடுமாற்றம் ஏற்பட்டாலும் அது பெரிய விபத்தாக முடியக்கூடும். இருப்பினும், போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால், மக்கள் தங்கள் உயிரைப் பணையம் வைத்து இத்தகைய பயணங்களை மேற்கொள்கின்றனர்.
இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “வறுமை ஒரு மனிதனை எந்த எல்லைக்கும் அழைத்துச் செல்லும்” என்று வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர்.
அதேசமயம், இந்தியாவிலும் பல இடங்களில் பண்டிகைக் காலங்களில் இது போன்ற நிலை காணப்படுவதாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
