யூட்யூபர் இர்பான் குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தியதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் இர்பான் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. சாதாரண மக்கள் தவறிழைத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மக்களின் உயிர் காக்கும் பணியில் அக்கறை இன்றி மருத்துவத்துறை அமைச்சர் உள்ளார்.

தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை முதல் காவலர் மகள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் உயிர்காக்கும் துறையா? மக்களின் உயிரை பறிக்கும் துறையா? பல்வேறு குளறுபடிகளால் மருத்துவத்துறை சிக்கித் திணறுகிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.