அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்க, பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் ஒரு அதிரடி அமைதித் திட்டத்தை கையில் எடுத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ‘இஸ்லாமாபாத் உடன்படிக்கை’ என அழைக்கப்படும் இந்தத் திட்டத்திற்காக, அசிம் முனீர் அமெரிக்கத் துணை அதிபர் மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் இரவு முழுவதும் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது. உலகப் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் இரு நாடுகளும் உடனடியாகப் போரை நிறுத்துவது ஆகிய முக்கிய அம்சங்கள் இந்தத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

​இந்த அமைதித் திட்டம் தற்போது இரு நாடுகளின் மேசைக்கும் போயுள்ளது. வல்லரசு நாடுகளுக்கே சவால் விடும் வகையில், ஒரு பக்கம் அமெரிக்கா, மறுபக்கம் ஈரான் என இரண்டையும் சமாதானப்படுத்த பாகிஸ்தான் எடுத்துள்ள இந்த முயற்சி சர்வதேச அரசியலில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. ஒருவேளை இந்த உடன்படிக்கைக்கு இரு நாடுகளும் சம்மதித்தால், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் மேகங்கள் விலகி, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் குறைய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.