மத்தியப் பிரதேசத்தில் காண்ட்வா மாவட்டக் காவல்துறையினர் 17 எருமை மாடுகளை தினமும் 5000 ரூபாய் வரை செலவழித்து பார்த்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். ஐந்து நாள்களுக்கு முன்னர் எருமை மாடுகள், சட்டத்திற்கு புறம்பாக கடத்தப்பட்டபோது காவல்துறையினரால் மீட்கப்பட்டன.

நீதிமன்றம் அனுமதி அளித்த பின்னர் மாடுகள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் வரை காவல்துறை அதிகாரிகள் அந்த எருமைமாடுகளை இரவு பகலாக பார்த்துக்கொள்கிறார்கள் என்று அவர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.