பொதுவாகவே வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவு இருக்கும். இதற்காக தங்களுடைய வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை சேமித்து வருகின்றனர். அவ்வாறு சேமித்த பணத்தில் வீட்டை கட்ட கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினரை அவர்கள் நாடும்போது ரியல் எஸ்டேட் காரர்கள் வாடகை வீட்டவர்களை புதிய வீட்டுமனை டென்டருக்கு ஒப்புக்கொள்ள வைக்க வீடு கட்ட தேவைப்படும் வழக்கமான தொகையை விட 15 சதவீதம் குறைத்துக் கூறுகிறார்கள்.

அதன் பிறகு வீட்டுமனை வேலை முடியும் போது அடிக்கடி ஏறும் கட்டுமான பொருட்களின் விலையால் பில்டர்கள் நஷ்டத்தை சந்திக்கின்றனர். ஈடு செய்ய வீட்டுக்காரர்களிடம் டென்டரின் போது ஒப்புக்கொண்ட தொகையை விட கூடுதல் தொகை வசூல் செய்யப்படுகிறது. இதனை தவிர்க்க வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன்படி கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்தவர்கள் வீட்டு வசதி மற்றும் குறைந்த விலை வீட்டு திட்டங்களுக்கான டெண்டர்களின் போது விலையை குறைக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.