அதிக கட்சிகள் இடம் பெற்றுள்ளதால் பாஜக கூட்டணி மெகா கூட்டணியாக அமைந்துள்ளது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ஒரு தொகுதியை பல்வேறு கட்சிகள் கேட்க வாய்ப்புள்ளதால் பேச்சு வார்த்தைக்கு பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறிய அவர், இரட்டை இலை சின்னத்தை பெற்று கண்டிப்பாக அதில் தான் போட்டியிடுவோம் என்றார். அதேபோல குக்கர் சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.