தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கி அரசியலிலும் தடம் பதித்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டும் மனுத்தாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 21 பக்கம் மனு தாக்கல் செய்துள்ள சங்கீதா அதில் வைத்த குற்றசாட்டுகள் தான் தற்போது அதிர வைக்கிறது.
அதாவது நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருந்ததாகவும் அவருடன் வெளிநாடுகள் மற்றும் பொது இடங்களுக்கு சென்றதாகவும் சங்கீதா குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில் அந்த நடிகை தன் கணவனுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிடும்போது அதற்கு தன் கணவர் எதிர்ப்பு தெரிவிக்காததாகவும் இது தனக்கும் தன் குழந்தைகளுக்கும் பெரிய அவமானமாக இருந்ததாகவும் சங்கீதா கூறியுள்ளார். அதன் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த விவகாரம் தனக்கு தெரிய வந்ததாகவும் இதை தட்டி கேட்டதால் தன்னை அவமானப்படுத்தி தனியாக வாழும்படி நிர்பந்தித்ததாகவும் சங்கீதா கூறிய நிலையில் அந்த நடிகையுடன் உறவை கைவிடுவதாக கூறி தொடர்ந்து அந்த உறவின் நீடித்ததாகவும் இதனால் மனரீதியாக வேதனைக்கு உள்ளானேன் தனக்கு அவர் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் நடிகர் விஜய் அவருடைய அந்தஸ்து மற்றும் வருமானத்திற்கு ஏற்ப தனக்கு நிரந்தர ஜீவனாம்சம் தர வேண்டும் எனவும் விவாகரத்து தீர்ப்பு வரும் வரை தற்போது தங்கியுள்ள நீலாங்கரை இல்லத்திலேயே தங்கி இருக்க அனுமதி வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதே நேரத்தில் விஜய் தரப்பிலிருந்து தனக்கு அழுத்தம் வந்தால் அதன் நடிகையை எதிர் மனுதாரராக சேர்ப்பேன் என்றும் அவருடன் என் கணவனுக்கு இருக்கும் ஆதாரங்களை வெளியிட தயங்க மாட்டேன் எனவும் சங்கீதா எச்சரித்துள்ளார்.
