பெங்களூருவில் உள்ள ஒரு வீட்டின் பால்கனியில் முற்றிலும் செயல்பாட்டில் உள்ள கழிப்பறை அமைக்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பொதுவாக வீட்டின் உட்புறத்தில் இருக்க வேண்டிய கழிப்பறை, இப்படி பால்கனியில் திறந்தவெளியில் இருப்பது பார்ப்பவர்களை வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
மேலும் இந்த விசித்திரமான கட்டிட வடிவமைப்பைக் கண்டு சமூக வலைதள பயனர்கள் பலரும் வேடிக்கையான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள், இது குறித்து பல்வேறு கிண்டலான கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர்.
இதனால் “இயற்கையின் அழைப்பிற்கு பதில் சொல்லும்போது, இயற்கையையே ரசிக்கலாம்” என்றும், “இதற்கு எக்ஸாஸ்ட் ஃபேன் தேவையில்லை, இயற்கையான காற்றோட்டம் கிடைக்கும்” என்றும் கேலியாகப் பதிவிட்டுள்ளனர். சிலர் இது ஒரு ‘மாஸ்டர் பிளாஸ்டர் இன்னோவேஷன்’ என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்ட நிலையில், இன்னும் சிலர் தனியுரிமை கருதி அங்கு திரை போட வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளனர்.
