இணையதளங்களில் தினமும் விதவிதமான வீடியோக்கள் வெளியாகி நம்மை ஆச்சரியப்படுத்துவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு நபர் மீன் பிடிப்பதற்காகக் கையாண்ட வினோதமான தொழில்நுட்பம் இணையவாசிகளிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு நபர் தனது உடல் முழுவதும் ஒரு பெரிய கோணிப்பையைச் சுற்றிக் கொண்டுள்ளார். அவரது கண்கள் மட்டுமே வெளியில் தெரியும்படி உடல் முழுவதும் மறைக்கப்பட்டுள்ளது. அந்தப் பையின் மீது ஆங்காங்கே கோதுமை மாவினால் செய்யப்பட்ட சிறு உருண்டைகள் (தூண்டில் இரை) ஒட்டப்பட்டுள்ளன. அந்த மாவு உருண்டைகளுக்கு நடுவே மீன்களைச் சிக்க வைப்பதற்கான சிறிய தூண்டில் முட்களும் பொருத்தப்பட்டுள்ளன.
முதலில் அந்த நபர் எதற்காக இப்படிச் செய்கிறார் என்று யாருக்கும் புரியவில்லை. ஆனால், அவர் அப்படியே தண்ணீருக்குள் இறங்கிச் சிறிது நேரம் அசையாமல் நிற்கிறார். அந்த மாவு உருண்டைகளைச் சாப்பிடுவதற்காக மீன்கள் அவரை நோக்கிப் படையெடுக்கின்றன. மாவு உருண்டையைக் கடிக்க முயற்சிக்கும்போது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தூண்டில் முட்களில் மீன்கள் ஒவ்வொன்றாகச் சிக்கிக்கொள்கின்றன.
View this post on Instagram
சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் கரையேறும்போது, அவரது உடல் முழுவதும் டஜன் கணக்கிலான மீன்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இதைப் பார்த்த நெட்டிசன்கள் “இது என்ன புதுவிதமான தொழில்நுட்பம்?” என ஆச்சரியத்தில் வாயடைத்துப் போயுள்ளனர்.
@fisherman_animal_lover_original என்ற எக்ஸ் (X) தளப் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். வீடியோவைப் பார்த்த ஒரு பயனர், “ஆரம்பத்தில் இதைப் பார்க்கப் பயமாக இருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், “இந்த நபர் மீன் பிடிப்பதில் அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டார்” எனப் பாராட்டியுள்ளார்.
மேலும் நவீன கருவிகள் எதுவுமின்றி, தனது உடலையே ஒரு தூண்டிலாக மாற்றி அந்த நபர் காட்டிய இந்தத் திறமை தற்போது இணையத்தில் ‘டிரெண்டிங்’ ஆகி வருகிறது.
