“திமுக ஆட்சியில வாங்குன கடனுக்காகவே நாம இப்போ வருஷத்துக்கு வெறும் வட்டி மட்டுமே 67,000 கோடி ரூபாய் கட்டிக்கிட்டு இருக்கோம் !” என்று தமிழகத்தின் தற்போதைய நிதிநிலை குறித்த அதிரடி வெள்ளை அறிக்கையை வெளியிட்டு மாண்புமிகு நிதியமைச்சர் மரிய வில்சன் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, மாநிலத்தின் நிதிநிலை குறித்து வெளிப்படையான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததன் படி, இன்று மாலை நிதியமைச்சர் இந்த திடுக்கிடும் அறிக்கையை வெளியிட்டார்.

அதில், தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கடன் சுமையானது கடந்த காலங்களில் 5 லட்சம் கோடியாக இருந்தது, தற்போது நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு 13.18 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முந்தைய திமுக அரசு முதலீட்டுப் பணிகளுக்கு அல்லாமல், அன்றாடச் செலவுகளுக்காகவே கண்டபடி கடன் வாங்கியுள்ளதாகவும், கனிமவளத் துறையில் நடந்த மெகா ஊழல் தான் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைய முதன்மைக் காரணம் என்றும் சாடினார்.

தற்போதைய வருவாய் பற்றாக்குறையானது கொடிய கோவிட் பெருந்தொற்று காலத்தை விடக் கடும் உச்சத்தைத் தொட்டுள்ளதாகவும், இந்தியாவின் முதன்மை மாநிலமாக இருந்த தமிழ்நாடு இப்படிச் சரிந்துள்ளதை மீட்கப் போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்