உலக அளவில் பல முன்னணி நிறுவனங்கள் பல்வேறு காரணங்களுக்காக ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக கூகுள், அமேசான், ஷேர் சாட், மெட்டா, மைக்ரோசாப்ட் போன்ற பல நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கி வருகிறது. தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக அளவில் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரபல கூகுள் நிறுவனம் புதிய ஊழியர்களை நேர்காணல் செய்து கொண்டிருந்த ஊழியர் ஒருவரை திடீரென பணி நீக்கம் செய்துள்ளதாக தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது கூகுள் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு ஊழியராக லானிகன் ரியான் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வேலைக்கு விண்ணப்பித்த நபர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நேர்காணல் செய்து கொண்டிருந்தார். அப்போது கூகுள் நிறுவனம் திடீரென உங்களை வேலையில் இருந்து நீக்குவதாக அவரிடம் கூறியுள்ளது. இதனால் லானிகன் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளார். மேலும் இந்த தகவலை அவர் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ள நிலையில் இப்படி கூட பணிநீக்கம் இருக்குமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.