இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் சீனா, உக்ரைன் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்று மருத்துவம் படிக்கிறார்கள். இதேபோன்று இங்கிலாந்திலும் இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் உயர் கல்வி படிக்கிறார்கள். கடந்த வருடம் மட்டும் இந்தியாவை சேர்ந்த 1 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்துள்ளனர். இந்த மாணவர்கள் நிறுவனங்களில் பகுதி நேரமாக ஒரு வாரத்திற்கு 20 மணி நேரம் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது.

ஆனால் தற்போது இங்கிலாந்தில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுவதால் மாணவர்களின் பகுதிநேர வேலை நேரத்தை நீட்டிப்பதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மாணவர்கள் ஒரு வாரத்திற்கு பகுதி நேரமாக வேலை செய்யும் நேரத்தை 30 மணி நேரமாக உயர்த்துவதற்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து இங்கிலாந்து பிரதமர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.