உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இளைஞர் ஒருவர் தனது காதலிக்கு சினிமா பாணியில் காதல் விடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. காசியாபாத்தின் ராஜ்நகர் பகுதியில் அமைந்துள்ள ‘கௌர் சென்ட்ரல் மால்’ என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்த இளைஞர் பொதுமக்களுக்கு நடுவே மண்டியிட்டு தனது காதலிக்கு மோதிரம் அணிவித்து காதலைத் தெரிவித்தார்.
அதோடு நில்லாமல், அங்கேயே அந்தப் பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்து, தாலி (மங்கலசூத்திரம்) அணிவித்தது அங்கிருந்த அனைவரையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த நெகிழ்ச்சியான மற்றும் வியக்கத்தக்க தருணத்தை அங்கிருந்த மக்கள் தங்கள் செல்போன்களில் படம்பிடித்தனர்.
गाजियाबाद के गौर सेंट्रल मॉल में पहले लड़की को किया प्रपोज, फिर सिंदूर और मंगलसूत्र पहनाया, वीडियो वायरल#Ghaziabad | #ViralVideo pic.twitter.com/l7eYVF9QPG
— NDTV India (@ndtvindia) December 21, 2025
“>
தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களில் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், இதற்குப் பலதரப்பட்ட கருத்துகள் எழுந்துள்ளன. சிலர் இந்தச் செயலை மிகவும் உணர்ச்சிகரமான மற்றும் அழகான காதல் வெளிப்பாடு என்று பாராட்டி வருகின்றன.
மேலும் பொது இடங்களில் இது போன்ற செயல்கள் தேவையற்றவை என்றும், இது ஒரு விளம்பர யுக்தி என்றும் மற்றவர்கள் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், காசியாபாத் இளைஞரின் இந்த துணிச்சலான காதல் முயற்சி இணையவாசிகளிடையே தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
