பிரிவோம் சந்திப்போம் தொடரின் மூலமாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் ரச்சிதா மகாலட்சுமி. இவர் அந்த தொடரில் நடித்த தினேஷை காதலித்து 2013 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்துவாழ்ந்து  வருகிறார்கள். இதற்கிடையில் பிக் பாஸ்க்கு சென்று வந்த ரச்சிதா தற்போது அதன் பிறகு பயங்கர பிசியாக காணப்படுகிறார். தமிழ் மற்றும் கன்னடம் என்று இரண்டு மொழிகளிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

தமிழில் இரண்டு படங்களை கைவேசம் வைத்துள்ள ரச்சிதா கன்னடத்தில் ரங்கநாயகா என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார். அந்த படத்தில் அவர் ஜக்கேஷ் என்பவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஜக்கேஷ்  60 வயதாகும் நிலையில் தற்போது எம்பி ஆக பதவி வகித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ரச்சிதா நடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் மார்ச் 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ரச்சிதா தன்னுடைய முதல் படத்திலேயே 60 வயது நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.