டெல்லிக்குச் சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பயணி ஒருவரிடம், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ’18 முதல் 20 வயதுடைய அழகான பெண்களை’ பாலியல் தொழிலுக்காக ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்தப் பயணி ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருந்த போது, ஓட்டுநர் மிகவும் வெளிப்படையாகவே சட்டவிரோத கட்டண சேவைகள் மற்றும் பெண்களின் வயது விவரங்களைக் கூறி ஆசை காட்டியுள்ளார்.

இந்நிலையில் இந்தியாவின் தலைநகரில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் கேள்விக்குறியாக்கப்படும் வகையில் அமைந்துள்ள இந்தச் சம்பவம், இணையவாசிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அந்த வெளிநாட்டுப் பயணி ஓட்டுநரின் பேச்சைக் கேட்டு முகம் சுளித்ததோடு, அதனைத் தனது கேமராவிலும் பதிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by David Xiao (@daviddxiao)

“>

இந்த டெல்லி போன்ற பெருநகரங்களில் வெளிநாட்டுப் பயணிகளை ஏமாற்றுவதும், இது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதும் நாட்டின் பிம்பத்தைச் சீர்குலைப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.