நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் ராகவ் சதா, செல்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் இன்கமிங் அழைப்புகளைத் தடுப்பது குறித்துத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

போதிய ரீசார்ஜ் கட்டணம் இல்லாதபோது, வெளிச்செல்லும் அவுட்கோயிங் அழைப்புகளை (Outgoing calls) நிறுத்துவது வணிக ரீதியாகப் புரிந்துகொள்ளத்தக்கது என்றாலும், உள்வரும் இன்கமிங் அழைப்புகளைத் (Incoming calls) தடுப்பது முற்றிலும் தவறானது மற்றும் நியாயமற்றது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மொபைல் நிறுவனங்களின் இத்தகைய நடவடிக்கையால் ஏழைகள், முதியவர்கள் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் சாதாரணப் பயனர்கள் போதிய ரீசார்ஜ் செய்ய முடியாத சூழலில் தொடர்புகளை இழந்து பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என அவர் கவலை தெரிவித்துள்ளார்.