பஞ்சாரா சமூகத்தின் மிகச்சிறந்த ஆன்மீக சொற்பொழிவாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான ரத்தோடு மகாராஜ் அவர்கள், பஜனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த போதே காலமானார் என்ற செய்தி மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தைப் பரப்புவதில் அவர் முக்கிய பங்காற்றினார்.

மேலும் ஒரு ஆன்மீக நிகழ்ச்சியில் அவர் பஜனை பாடிக் கொண்டிருந்த தருணத்தில், திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. இந்த நெஞ்சை உலுக்கும் காட்சியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, இது அவரது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“>

இதனால் ரத்தோடு மகாராஜ் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதையும் பஞ்சாரா சமூகத்தின் விழிப்புணர்விற்காகவும், சமூக முன்னேற்றத்திற்காகவும் அர்ப்பணித்தவர். எளிய மொழியில் ஆன்மீக கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை இவருக்கு உண்டு. அவரது மறைவு பஞ்சாரா சமூகத்திற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஆன்மீக உலகிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

இந்நிலையில் இவரது இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் கலந்து கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இறைப்பணியில் இருக்கும் போதே அவரது உயிர் பிரிந்தது, அவர் ஒரு புனிதமான ஆன்மா என்பதற்கு சான்றாக அமைந்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.