உத்திரப் பிரதேச மாநிலம் மஹோபா பகுதியில், உடற்பயிற்சிக்காக பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுதீர் குப்தா என்ற அந்த நபர், தனது நண்பர்களுடன் உற்சாகமாக பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தார். ஆட்டம் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருந்த தருணத்தில், திடீரென நிலைகுலைந்த சுதீர் குப்தா, அப்படியே கோர்ட்டில் சுருண்டு விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற வீரர்கள் உடனடியாக ஓடி வந்து அவரைத் தூக்க முயன்றனர்.
बैडमिंटन खेलते हुए मौत
यूपी के महोबा में सुधीर गुप्ता बैडमिंटन खेल रहे थे, तभी अचानक गिर पड़े और मौत हो गई.
वीडियो 👇 pic.twitter.com/lwXEEe20RE
— Ranvijay Singh (@ranvijaylive) March 30, 2026
மயக்கமடைந்த அவருக்குத் தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்ய முயன்றனர். ஆனால், அவரது உடல் எந்த அசைவும் இன்றி இருந்ததால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
துரதிர்ஷ்டவசமாக, அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபகாலமாக உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் விளையாட்டில் ஈடுபடுபவர்கள் மத்தியில் இது போன்ற திடீர் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
