இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்டது. இளம் தலைமுறையினர் இணையதளங்களில் மூழ்கி இருக்கிறார்கள். குழந்தைகள் முதல் கொண்டு செல்போனில் நேரத்தை செலவிடுவதால் உடல்ரீதியான மற்றும் மன ரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. அதன்பிறகு இணையதள பயன்பாடுகளால் இளைஞர்கள் விபரீதமான செயல்களில் ஈடுபடுவதோடு அசம்பாவித சம்பவங்களும் சில நேரங்களில் அரங்கேறி விடுகிறது. அந்த வகையில் instagram மூலமாக 10 வயது சிறுமி ஒருவர் 16 வயது சிறுவனுடன் பழகியுள்ளார்.

அந்த சிறுமி தன் தாயின் செல் போனிலிருந்து இன்ஸ்டாகிராம் பயன்படுத்திய நிலையில் 16 வயது சிறுவனுடன் பேசி உள்ளார். பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர். இந்த சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது. இந்நிலையில் 16 வயது சிறுவன் மற்றும் 10 வயது சிறுமி இருவரும் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்த நிலையில் இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்ட சிறிது நேரத்தில் காவல் துறையினர் அவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் சிறுமியை பெற்றோரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.