நடிகை இலியானா டி குரூஸ் தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் நண்பன் படத்தோடு தமிழில் இருந்து விடைபெற்றார். தெலுங்கு, இந்தி, தமிழ் மொழிகளில் 30 படங்கள் நடித்துள்ளார். இதற்கிடையில் ஆஸ்திரேலிய புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரேவை கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

செவ்வாய்கிழமை அதிகாலை தான் கர்ப்பமாக இருப்பதை தனது ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில், இலியானா இரண்டு படங்களை பதவிட்டுள்ளார். அதில் அவர் “விரைவில் வரும் உன்னை சந்திக்க காத்திருக்க முடியாது என் குட்டி அன்பே” என்று குறிப்பிட்டிருக்கிறார்.