சென்னையின் சேப்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், காதலன் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேப்பாக்கத்தைச் சேர்ந்த இந்த மாணவி, ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் இடையில் சமீபத்தில் பிரச்சனை ஏற்பட்டதால், மாணவியை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து பிளாக் செய்துள்ளார் காதலன்.
இதனால் மனமுடைந்த மாணவி, திங்கட்கிழமை, சேப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலின் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் மாணவி படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
