சமூக வலைத்தளத்தில் உடற்பயிற்சி காணொளிகளை வெளியிடுவதன் மூலம் பிரபலமானவர் அமெரிக்க ராணுவ வீராங்கனை மிச்சேல் யங்க். ஒரு லட்சம் பாலோவர்ஸ் கொண்ட இவருக்கு கிரேசி என்ற 12 வயது மகள் இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு தனது மகளின் பிறந்தநாளை மிச்சேல் கொண்டாடினார்.

இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் மிச்சேல் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.